காணாமல் போனோர் அலுவலகம் பெரும் ஏமாற்று விசாரணை அதிகாரிகளை தடுத்து நிறுத்தி எதிர்ப்பு; -முல்லைத்தீவில் மக்களின் போராட்டத்தால் பெரும் குழப்பம்

காணாமல் போனோர் அலுவலகம் பெரும் ஏமாற்று விசாரணை அதிகாரிகளை தடுத்து நிறுத்தி எதிர்ப்பு; -முல்லைத்தீவில் மக்களின் போராட்டத்தால் பெரும் குழப்பம்

முல்லைத்தீவைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் நேற்றும் இன்றும் விசாரணை நடத்துவதற்காக 244 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இது ஏமாற்று வேலை என கடும் தெரிவித்து மக்கள் நேற்று கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

மக்கள் எதிர்ப்பை மீறி தந்திரமாக உள்ளே சென்று அதிகாரிகள் விசாரணைகளை நடத்திய போது திடீரென உள்ளே நுழைந்த சென்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எதிர்ப்பில் ஈடுபட்டதால் குழப்பநிலை ஏற்பாட்டது. இதனையடுத்து அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு உறவினர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதுடன், பெரும் குழப்பமும் நிலவியது.

காணாமல் போனோர் அலுவலகத்தினால் நேற்றும் இன்றும் முல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்டோரி உறவுகளிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இது ஏமாற்று, யாரும் விசாரணைக்கு செல்ல வேண்டாம். ஓ.எம்.பியை எதிர்த்து போராட்டம் இடம்பெறும் என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றுக் காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்க வந்த காணாமல் போனோர் அலுவலகத்தின் அதிகாரிகள் உள்ளே செல்லவிடாது முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுதிரண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், விசாரணை அதிகாரி ஒருவர் வந்த வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மற்றுமொரு வாகனத்தில் வந்த ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மாவட்ட செயலகத்தின் வெளியேறும் வழி ஊடாக உள்ளே சென்றனர். இதனையடுத்து செயலகத்துக்குள் நுழைந்த மக்கள் உள்ளே சென்று அதிகாரிகள் வெளியே வந்து மக்களுக்கு பதிலளிக்க வேண்டுமெனக் கோரினர்.

தொடர்ந்து காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர் உள்ளிட்டவர்கள் வருகைதந்து எதிர்ப்பில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடினர் .

இதன்போது உங்கள் விசாரணை தேவையில்லை. உங்களை நம்புவதாக இருந்தால் நாம் ஏற்கனவே உங்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்த விபரங்களில் உள்ள காணாமல் போனவர்கள்,அல்லது இங்கு இருந்து கையளிக்கப்பட்ட சிறுவர்கள் பதினாறு பேரை கொண்டுவந்து காட்டுங்கள் நாங்கள் உங்களை நம்பி வந்து பதிவுகளை மேற்கொள்கிறோம் எனத் தெரிவித்து, விசாணைகள் நடத்த கடும் எதிர்ப்பு வெளியிட்டனர் . இந்நிலையில் தாம் விசாரணை செய்யவில்லை என்று தெரிவித்துவிட்டு அதிகாரிகள் மாவட்ட செயலக வளாகத்துக்குள் சென்றனர்.

எனினும் அங்கு விசாரணை இடம்பெற்றது. இதையறிந்த உறவுகள் மீண்டும் விசாரணை நடந்த இடத்துக்குள் நுழைந்து, அங்கு விசாரணைகளில் ஈடுபட்டகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பொலிஸார் வரவளைக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதன்போது அங்கு கடும் வாக்குவாதம் இடம்பெற்றது . இதையடுத்து தொடந்தும் விசாரணைகள் இடம்பெற்றன. எனினும் ஒருசிலர் மட்டுமே நேற்று விசாரணைக்கு சென்றுள்ளதாக தெரியவந்தது.

இதேவேளை, மக்கள் எதிர்பை வெளிப்படுத்திய பகுதியில் அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டிருந்தனர். மக்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் அவர்கள் செயற்பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று , புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு உள்ளிட்ட ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் 244 பேர் நேற்றும் இன்றும் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )