
ஆட்சியாளர்களை துரத்த அனைவரும் வாருங்கள்; 7ஆம் திகதி ஒன்று கூடுமாறு மிஹிந்தலை ரஜமஹா விகாரை விஹாராதிபதி அழைப்பு
மிஹிந்தலை ரஜமஹா விஹாரையின் மெதமலுவயில் அனைத்தின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எதிர்வரும் 7 ஆம் திகதி மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாக மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி வலவாஹெங்குனுவெவ தம்மரத்ன தேரர் தெரிவித்தார்.
மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
இன்று நாட்டில் மக்களுக்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த விடயங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு எடுத்துக் கூறினோம் மக்களுக்கு நிவாரணம் வழங்குங்கள் என்று சொன்னோம். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை அவர்களுடைய சுகபோக வாழ்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.அவர்களுக்கு வாக்களித்த மக்களோ பெரும் துயரத்தில் வாழக்கூடிய நிலையை இந்த அரசியல் வாதிகளே உருவாக்கியுள்ளனர்.
இந்த விடயங்களை ஆளும் தரப்பு மற்றும் எதிர் தரப்பிடம் எடுத்துரைத்தோம் எந்த பயனும் இல்லை அதனால் நாங்கள் இந்த நாட்டில் வாழக்கூடிய அனைத்தின மக்களையும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மதத்தலைவர்கள் அனைவரையும் வர வளைத்து இந்த நாட்டு மக்கள் படும் துயரத்தினை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது இந்த ஆட்சியாளர்களை பதவியில் இருந்து துரத்துவதற்குரிய மாபெரும் போராட்டமொன்றினை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்
ஆகவே எதிர்வரும் 7 ஆம் தி கதி அனைவரையும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

