மாவீரர் மாதிரி கல்லறைகள் நல்லூரில் மக்கள் அஞ்சலிக்கு

மாவீரர் மாதிரி கல்லறைகள் நல்லூரில் மக்கள் அஞ்சலிக்கு

மாவீரர் வாரம் ஆரம்பமாக உள்ள நிலையில் மாவீரர்களின் பெயர் விபரங்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் திங்கட்கிழமை மாலை-6 மணியளவில் யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபி முன்பாக மக்களின் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட உள்ளது.

34 மாவீரர்களின் கல்வெட்டுக்களை 17 மாவீரர்களின் பெற்றோர்கள் சமநேரத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்க உள்ளனர்.

இதேவேளை, இன்று முதல் மாவீரரர் வாரத்தின் இறுதிநாளான எதிர்வரும்-27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை குறித்த கல்வெட்டுக்கள் இவ்வாறு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )