பொலிஸாருடன் முட்டி மோதிய ஹிருணிகா

பொலிஸாருடன் முட்டி மோதிய ஹிருணிகா

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை இடை மறித்த பொலிஸாருடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர கடுமையாக வாக்குவதப்பட்டதுடன், பொலிஸாரையும் தள்ளி வீழ்த்திவிட்டு முன்னால் செல்ல முயற்சிகளில் ஈடுபட்டார்.

நேற்று பிற்பகல் மருதானையில் இருந்து புறக்கோட்டை நோக்கி நடத்தப்பட்ட பேரணி தொழில்நுட்பச் சந்திக்கு அருகில் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்ட போது, தனது ஆதரவாளர்களுடன் சென்று தொடர்ந்தும் முன்னால் செல்வதற்கு ஹிருணிகா முயற்சித்தார்.

இதன்போது பொலிஸார் அவரை முன்னால் செல்ல விடாது தடுத்த போது, அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதேவேளை அவர் பொலிஸாரையும் தள்ளிவிட்டு முன்னால் செல்லவும் முயற்சித்தார். நாங்கள் முன்னால் போக வேண்டும் அனைவரும் ஒன்றாக முன்னால் செல்வோம் என்று அனைவரும் அழைப்பும் விடுத்தார். எனினும் பொலிஸார் அவரையும் ஆர்ப்பாட்டக் காரர்களையும் தொடர்ந்தும் முன்னால் செல்ல விடாது தடுத்து நிறுத்தினர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )