சிறையில் தேரரைக் கொல்ல சதி முயற்சி

சிறையில் தேரரைக் கொல்ல சதி முயற்சி

அனைத்து பல்கலைகழக பிக்குகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் கல்வேவ ஸ்ரீதம்ம தேரரை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றம்சாட்டியுள்ள அனைத்து பல்கலைகழக மாணவர் சம்மேளனம், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள -ஒருவார காலத்திற்கு மேல் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள பௌத்த மதகுருவிற்கு உரிய வசதிகள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

ஸ்ரீதம்மதேரர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,22 ம் திகதி அவரை பார்ப்பதற்காக அவரின் சகோதரி பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு சென்றார் ஆனால் அவரால் தனது சகோதரருடன் சரியான விதத்தில் பேச முடியவில்லை என அனைத்து பல்கலைக கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் டெரன்ஸ் ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத விசாரணை பிரிவை சேர்ந்தவர்கள் பௌத்தமதகுருவிற்கு பரசிட்டோமலை கூட கொடுக்கவில்லை, போதியளவு உணவை கூட வழங்கவில்லை.இந்த தகவல்கள் வெளியில் தெரியவந்த பின்னரே பயங்கரவாத விசாரணை பிரிவினர் இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தத் தொடங்கினர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த மதகுரு ஒருவார காலத்திற்கு மேல் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள போதிலும் 25 ம் திகதியே அவர் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டார்,அதுவரை அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கையை கூட அதிகாரிகள் எடுக்கவில்லை என அனைத்து பல்கலைக கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் டெரன்ஸ் ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தை சேர்ந்த எவரையும் கல்வேவ ஸ்ரீதம்ம தேரரை சந்திப்பதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை ஏனைய செயற்பாட்டாளர்களிற்கும் அனுமதி வழங்கவில்லை,குறிப்பிட்ட தரப்பினருக்கும் அவர்கள் உரிய தகவல்களை வழங்கவில்லை,அவரது சகோதரி அவரை பார்ப்பதற்கு சென்றிருக்காவிட்டால் உண்மை நிலை தெரியவந்திருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினதும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சனரினதும் நோக்கம் கொலை முயற்சியே என சந்தேகத்திற்கு இடமின்றி தெரிவிக்க முடியும் மாணவர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் எப்படி ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பது வரலாறு மூலம் எங்களால் இதனை புரிந்துகொள்ள முடியும் என அனைத்து பல்கலைக கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் டெரன்ஸ் ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச காலத்திலும் மாணவ செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )