ஆபத்தான கடல் பயணம் செய்யும் இலங்கை அகதிகள்

ஆபத்தான கடல் பயணம் செய்யும் இலங்கை அகதிகள்

பிரிட்டிஷாரால் உரிமை கோரப்பட்ட பகுதியான டியாகோ கார்சியாவை சென்றடைந்திருக்கும் தமிழ் அகதிகள் ஆபத்தான படகுப் பயணத்தை மேற்கொள்வதற்கு ஐக்கிய இராச்சியம் உதவுவதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இலங்கையில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகுகள்பிரச்சினையில் சிக்கியதை அடுத்து இந்து சமுத்திரத் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வழக்கறிஞர்களை மேற்கோள்காட்டி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆயினும் அதே படகுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் இதனால் குழந்தைகள் உட்பட பயணிகளை “கடுமையான ஆபத்தில்” விட்டிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் .

அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட சட்டபூர்வமான கடிதங்களின் பிரகாரம் , 46 பேருடன் படகொன்று மூன்று வாரங்கள் கடலில் பயணம் செய்த பின்னர் பிரெஞ்சு பிரதேசமான ரீயூனியனை அடைந்ததாக வழக்கறிஞர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். 18 மாத குழந்தை உட்பட 35 பேரை ஏற்றிச் சென்ற மற்றொரு படகு இயந்திரம் செயலிழந்ததால் மீண்டும் டியாகோகார்சியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. டியாகோகார்சியாவானது சாகோஸ் தீவுகளின் ஒரு பகுதியாகுமென்பதுடன் அதனை பிரித்தானிய இந்து சமுத்திர ஆட் புல பகுதியென (பி.ஐ.ஓ.ரி) பிரிட்டன் தொடர்ந்து இறைமை கோருகிறது.

இதேவேளை 81 அகதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிட்டிஷ் சட்ட நிறுவனமான லீ டே, அவர்கள் வெளியேற விரும்புவதாகக் கூறியுள்ளது. இருப்பினும் பிரிட்டனின் சிறுவர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ,மக்களின் பயணத்திற்கு படகுகள் பாதுகாப்பானதாக மற்றும் கடல்வழிப் பயணத்திற்கு உகந்ததாக இருக்கிறதா என்று பார்க்காமல் வெளியேற அனுமதித்ததால் அதன் மூலம், பிரிட்டன் சர்வதேச சட்டத்தை மீறியிருக்கலாமெனவும் அவர்கள் கூறியுள்ளனர்

இலங்கைக்கு படகு செல்கின்றது என்பது குறித்த அரசின் கூற்றில் நம்பகத்தன்மை இல்லையெனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 09 இல் 16 பெரியவர்கள் மற்றும் 10 வயது பிள்ளையுடன் புறப்பட்ட படகின் இயந்திரம் பழுதடைந்தாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். செய்தி அறிக்கையின்படி, படகு “பாதுகாப்பு அமைச்சின் பணியாளர்களால் இலங்கைக்கு செல்வதற்காக கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டது” என்று அரசாங்கம் கூறியதாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

முன்னர் 1,500 பவுண்டுகள் உதவியுடன் பயணிகள் விமானத்தில் திரும்பிச் செல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில் , ரீயூனியனுக்குப் பதிலாக இலங்கைக்கு படகு செல்கிறது என்ற அரசாங்கத்தின் கூற்றில் “நம்பகத்தன்மை இல்லை” என்று வழக்கறிஞர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

படகில் கண்காணிக்க இடமளிக்கும் ஒரு தானியங்கி அடையாள முறைமை பொருத்தப்படவில்லை, இதனால் அதன் தற்போதைய இருப்பிடம் தெரியவில்லையென்பது வழக்கறிஞர்களின் கருத்தாகும்.

படகில் உயிர்காப்பு மிதவை இல்லை என்று நம்பப்படுவதாக பிரிட்டிஷ் சட்ட நிறுவனம் கூறுகிறது.மேலும், படகில் ரேடியோ அல்லது உயிர்காக்கும் கருவிகள் உள்ளதாக பதிவு செய்யப்பட்டதற்கான பதிவு எதுவும் படகில் இல்லை என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் சட்ட நிறுவனமான லீ டே, படகில் உயிர் காப்பு மிதவை இல்லை என்றும், கப்பலில் இருக்கும் அனைத்து பயணிகளுக்கும் குறைவான உயிர்காப்பு அங்கிகளே இருந்ததாக நம்பப்படுகிறது என்று கூறியுள்ளது.

இதற்கிடையில்,அவர்கள் தாமாக முன்வந்து தீவை விட்டு வெளியேறியுள்ளனர் என்று அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். பி ஐ ஓ ரி நிர்வாகம், “கப்பல்கள் கடலுக்குத் தகுதியானவை என்பதை உறுதி செய்வதற்காக” கடல் சோதனைகளை இலகுவாக்கியது என்று அந்தச் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியுள்ளார்

அக்டோபர் 13 ஆம் திகதி பிரிட்டிஷ் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம், 60 புலம்பெயர்ந்தோர் இலங்கைக்கு திரும்பிச் செல்ல உதவியது என்று கூறியிருந்தது .

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )