கொழும்பில் 27 இல் பாரிய போராட்டம்

கொழும்பில் 27 இல் பாரிய போராட்டம்

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை மீண்டும் தீவிரப்படுத்துவதற்கு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் மாணவர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

இம்மாத இறுதியில் இருந்து இந்தப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதி பல்வேறு தொழிற்சங்கங்கள் கொழும்பில் பேரணிகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் இருந்து பெருந்திரளானவர்களை கொழும்புக்கு அழைத்து வந்து பேரணிகளை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை நவம்பர் 2 ஆம் திகதி மற்றுமொரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் , பொது அமைப்புகள் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்றுள்ளது. இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடலில் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக கொழும்பில் பேரணிகளை நடத்துவதற்கு கூட்டாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )