தமிழகத்தில்  தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை தேடி வேட்டை

தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை தேடி வேட்டை

தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் இருவரைத் தேடி இந்திய தேசிய புலனாய்வு முகவரமைப்பு தமிழகத்தில் இரண்டு இடங்களில் தீவிர தேடுதல்களை நடத்தியதாக அதிகாரி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

சேலம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சனிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் விடுதலைப் புலிகள் தொடர்பான டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டதாக இந்திய தேசிய புலனாய்வு முகமையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள், புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள், சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிமருந்துகள், விஷம் தயாரிக்கும் விதைகள் உள்ளிட்டவையும் சோதனையின் போது கைப்பற்றப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் எனக் கூறப்பட்டு தேடப்படும் இருவர் குறித்த வழக்கு முதலில் மே 19 அன்று தமிழகத்தின் ஓமலூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் கடந்த ஜூலை 25 ஆம் திகதி இந்திய தேசிய புலனாய்வு முகாமையால் இந்த வழங்கு மீண்டும் பதிவு செய்யப்பட்டது என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இருவரும் தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் முக்கிய தலைவர்களை குறிவைத்து சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிமருந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )