தீர்மானத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு; பாகிஸ்தானும் சீற்றம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று வியாழக்கிழமை இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு இடம்பெற்ற நிலையில்,இந்தத் தீர்மானத்திற்கு சீனா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அத்துடன் இலங்கையின் சுதந்திரத்திற்கான தனது உறுதியான ஆதரவையும் சீனா வெளியிட்டுள்ளது.
தொடர்புபட்ட நாட்டின் இணக்கம் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள இந்த தீர்மானம் அரசியல்மயமாக்கலின் விளைவு என சீனா தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பை கோரிய பாகிஸ்தான், தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது.
இந்தத் தீர்மானம், மனித உரிமை பேரவைக்கு வழங்கப்பட்ட ஆணைக்கு அப்பாற்பட்டது. விடுதலைப்புலிகள் இழைத்த அநீதிகள் எவையும் இந்த விசாரணைகளிற்கான ஏற்பாடுகள் எவையும் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தது.

