
கோட்டாவை சந்தித்த சுப்ரமணியன் சுவாமி; மகிந்த வீட்டு நவராத்திரி விழாவிலும் பங்கேற்பு
இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற நவராத்திரி விழாவில் சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையிலேயே அவர் நேற்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் சந்தித்தார் . கோட்டாபயவை சந்திக்க சட்டத்தரணிகள் அடங்கிய குழுவுடன் சென்றிருந்தார்.
இதன்போது கோட்டாபய ராஜபக்சவுடன், சுப்பிரமணியன் சுவாமி பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவை சுப்பிரமணியன் சுவாமி சந்திக்கவிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

