குருந்தூர் மலை கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு

குருந்தூர் மலை கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு

குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் சுவீகரிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு அப்பகுதிக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்து தொல்பொருள் திணைக்களத்தினர் சுவீகரித்துள்ள காணிகளைப் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரை தொடர்பு கொண்ட சார்ள்ஸ் எம்.பி. புதிதாக தொல்பொருள் திணைக்களத்தினர் மக்களின் விவசாய நிலங்களை சுவீகரித்துள்ளனர் எனவும், இதனால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியப்படுத்தியுள்ளார்.

இது தொட‌ர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் உடனடியாக விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )