யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் புதையலை தேடி அகழ்வுப்பணி ஆரம்பம் !!

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் புதையலை தேடி அகழ்வுப்பணி ஆரம்பம் !!

யாழ்ப்பாணம் இருபாலையில் உள்ள வீடொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் புதையலை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த வீட்டில் புலிகளின் புதையல்கள் காணப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு இரசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து புதையலை அகழ்வதற்கான அனுமதியினை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் கோரியிருந்தனர்.

நீதிமன்ற அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் இன்று சனிக்கிழமை புதையல் அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதையல் அகழ்வதற்காக கொழும்பில் இருந்து விசேட அணியினர் வந்துள்ளதாகவும், அகழ்வு பணிகளுக்காக கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )