வன்முறைக்கு அடக்குமுறையே ஒரே பதில்; கோட்டா செய்யாததை ரணில் செய்கிறார்

வன்முறைக்கு அடக்குமுறையே ஒரே பதில்; கோட்டா செய்யாததை ரணில் செய்கிறார்

வன்முறைக்கு அடக்குமுறையே ஒரே பதில் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செய்யாததை ஜனாதிபதி ரணில் அமுல்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

அடக்குமுறையை ஏவாவிட்டால் இந்த நாட்டில் ஒழுக்கம் நிலைநாட்டப்படமாட்டாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதை செய்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். சில காரணங்களால் அது நடக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அன்று வன்முறைக்கு தலைமை தாங்குபவர்களுக்கும், சமூக ஊடகங்களில் வன்முறையைப் பரப்புபவர்களுக்கும் எதிராக சட்டத்தை அமுல்படுத்தியிருந்தால் இன்று நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும்.

ஜனாதிபதி ரணில் அந்த வேலையைச் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். போராட்டக்காரர் போராட்டத்தை வழிநடத்திய விதத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. வன்முறைக்கு ஒரே பதில் அடக்குமுறைதான் என அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )