
பிரித்தானிய மன்னராக சார்ல்ஸ் பதவியேற்பு!
பிரித்தானியாவின் மன்னராக நியமிக்கப்பட்ட 3ஆம் சார்ல்ஸ் (வயது 73) மன்னர், பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் நடந்த விழாவின் போதே அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
அவரது தாயாரும் பிரித்தானியாவின் மகாராணியுமான 2ஆம் எலிசெபத் மரணமடைந்த நிலையில், முடிக்குரிய இளவரசரான 3ஆம் சார்ல்ஸ் மன்னராக அறிவிக்கப்பட்டிருந்தார்.