
காலம் ஆகினார் மகாராணி இரண்டாம் எலிசபெத்
பிரித்தானியாவின் நீண்ட கால முடியாட்சியை நடத்தி வந்த மகா ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமாகியுள்ளார்.
இந்நிலையில், பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நாளை லண்டனுக்கு எடுத்துச்செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் பால்மோரலில் ராணி அமைதியாக மறைந்துள்ளதுடன், அரசர் மற்றும் அவரது துணைவியான அரசியும் இன்று 08.09.2022 மாலை பால்மோரலில் தங்குவார்கள். நாளை அவர்கள் லண்டனுக்குத் திரும்புவார்கள்,” என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மகாராணியின் மரணத்துடன், முன்னாள் வேல்ஸ் இளவரசரான அவரது மூத்த மகன் சார்ல்ஸ், புதிய அரசராக இருந்து 14 காமன்வெல்த் நாடுகளுக்குத் தலைவராகவும் விளங்கி நாட்டை துக்க காலத்தில் வழிநடத்துவார் என அறிவிக்கப்ட்டுள்ளது.