
தென்னிலங்கையில் மீண்டும் பரபரப்பு: மஹிந்த-ரணில் திடீர் சந்திப்பு!
கொழும்பு அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு புதிய மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
அதேவேளை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 30ஆம் திகதி இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அது தொடர்பிலான விவாதம் 31ஆம் திகதி முதல் நேற்று மாலை வரை நடைபெற்றது.
இரண்டாம் வாசிப்பு மற்றும் குழுநிலை விவாதத்தின் பின்னர் நேற்று மாலை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன்போது ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 05 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இந்நிலையில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் 115 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் மறுபுறம் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருவரும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகரவின் மகளின் திருமண நிகழ்வில் ஒன்றாக கலந்துகொண்டனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரது புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்ற நிலையில் மஹிந்த – ரணிலின் இந்த சந்திப்பு அரசியல் அரங்கில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.