பேராசிரியர் பீரிஸ் தலைமையில் சுயாதீன அணியாக மேலும் 13 எம்.பி.க்கள்

பேராசிரியர் பீரிஸ் தலைமையில் சுயாதீன அணியாக மேலும் 13 எம்.பி.க்கள்

பொதுஜன பெரமுனவின் தவிசாளரும் தேசியப்பட்டியல் எம்.பி. யும் வெளிவிவகார முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் 13 எம்.பி.க்கள் ”பொதுஜன பெரமுன வின் சுயாதீன அணி ”யாக எதிர்கட்சிப் பக்கத்தில் சென்றமர்ந்தனர்.

பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 9.30 மணிக்கு கூடியது. இதனையடுத்து இடம்பெற்ற தினப் பணிகளைத் தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் தவிசாளரும் தேசியப்பட்டியல் எம்.பி. யும் வெளிவிவகார முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ”பொதுஜன பெரமுன வின் சுயாதீன அணி ”யாக எதிர்கட்சிப்பக்கத்தில் அமரப் போவது தொடர்பாக விசேட கூற்றொன்றை முன்வைத் தார்.

தன்னுடன் சேர்த் து முன்னாள் அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும,சன்ன ஜயசுமண,முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான டிலான் பெரேரா,நாலக கொட ஹேவா மற்றும் எம்.பி.க்களான சரித்த ஹேரத்,குமாரசிறி குணபால ரத்ன சேகர,உதயன சிரிந்து கொட ,வசந்த யாப்பா பண்டார,உபுல் கலப்பதி திலக் ராஜபக்ச,லலித் எல்லாவல ஆகிய 13 பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் எதிர்கட்சிப்பக்கத்தில் அமரப்போவதாக சபாநாயகருக்கு பீரிஸ் அறிவித்தார்.

எதிர்க்கட்சி அமோக வரவேற்பு

பேராசிரியர் பீரிஸ் எதிர்கட்சிப்பக்கத்தில் அமரப் போகும் பொதுஜன பெரமுன எம்.பி..களின் பெயர்களை ஒவ்வொன்றாக அறிவித்த போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் மேசைகளில் தட்டி அமோக வரவேற்பளித்தனர்.

பின்பக்கத்தால் எதிர்கட்சிப்பக்கம் சென்ற 13 எம்.பி.க்கள்

பேராசிரியர் பீரிஸின் உரை முடிவடைந்ததையடுத்து 13 எம்.பி.க்களும் எழுந்து எதிர்கட்சிப்பக்கம் செல்வதற்கு தயாரானார்கள்.அப்போது பீரிஸுக்கு அருகில் அமர்ந்திருந்த எஸ்.பி. திசாநாயக்க எம்.பி. சபையை குறுக்கறுத்து எதிர்கட்சிப் பக்கம் செல்லுமாறு பீரிஸுக்கு கூறியபோது அவர் அதனை மறுத்து அரச தரப்பின் பின்பக்க வாசல் வழியாக வெளியேறி எதிர்கட்சிப் பக்கத்தின் பின்பக்க வாசல் வழியாக உள்ளே வந்தார்கள்.

எழுந்து சென்று வரவேற்ற எதிர்க்கட்சித்தலைவர்

பொதுஜன பெரமுனவின் 13 எம்.பி.க்களும் எதிர்கட்சிப்பக்கம் வந்த போது எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச எழுந்து சென்று ஒவ்வொருவராக கைலாகு கொடுத்தும் கை கூப்பி வணங்கியும் வரவேற்றார்.இதனை நளின் பண்டார எம்.பி. தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படமெடுத்தார்.

பிரதமர் கருத்து

பொதுஜன பெரமுனவின் தவிசாளரும் தேசியப்பட்டியல் எம்.பி. யும் வெளிவிவகார முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் 13 எம்.பி.க்கள் ”பொதுஜன பெரமுன வின் சுயாதீன அணி ”யாக எதிர்கட்சிப்பக்கத்திற்கு சென்றமை தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர் தினேஷ் குணவர்தன ,சபையில் எம்.பி.க்கள் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் இடம் மாறுவது புதிய விடயமல்ல. எனது அரசியல் வாழ்க்கையில் இவ்வாறான இடம் மாறல்களை நான் பல தடவைகள் பார்த்திருக்கின்றேன்.எனவே இந்த இடம் மாறல் பெரிய விடயமல்ல என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )