பூர்வீக வீடு இருந்த காணியில் பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள்

பூர்வீக வீடு இருந்த காணியில் பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று வியாழக்கிழமை(26) வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அவரது பூர்வீக வீடு இருந்த காணிக்குள் நடைபெற்றது.

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அப் பிரதேசம் சிவப்பு மஞ்சள் கொடிகளால்  அலங்கரிக்கப்பட்டு  கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அவரின் இல்லத்தின் படத்தையும், கப்பல் படத்தையும் வைத்து இரண்டு கேக்கள் வெட்டப்பட்டு வழங்கப்பட்டதுடன் எள்ளுப்பாகு,சொக்லேட்,இனிப்பு  வகைகளும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் , மரக்கன்றுகளும் வழங்க ப்பட்டன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )