சாணக்கியனுக்கு எதிராக பிள்ளையான் தொடர்ந்த வழக்கு ஜனவரி 7க்கு ஒத்திவைப்பு!

சாணக்கியனுக்கு எதிராக பிள்ளையான் தொடர்ந்த வழக்கு ஜனவரி 7க்கு ஒத்திவைப்பு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டு தன்னை அவமதித்ததாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று (23) மீண்டும் கல்கிஸ்ஸை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான், சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, வழக்குத் தாக்கல் செய்த பிள்ளையானும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

இதேவேளை, வழக்கின் பிரதிவாதியான பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க வேண்டியிருப்பதால், நீதிமன்றத்திலிருந்து செல்ல அனுமதி கோரிய அவர், பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார்.அவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இந்தநிலையில், வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )