நாமலின் மனைவி வந்தால் அரசு கவிழும் ; அர்ச்சுனா எம்.பி.கூறுகிறார்

நாமலின் மனைவி வந்தால் அரசு கவிழும் ; அர்ச்சுனா எம்.பி.கூறுகிறார்

நாமல் ராஜபக்‌ஷவை சிறையில் தொடர்ந்தும் அடைக்கப்படுவாராக இருந்தால் அவரின் மனைவி அரசியலுக்கு வருவார். அதனால் இந்த அரசாங்கம் கவிழும் நிலை ஏற்படும் என்று யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அர்ச்சுனா எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒருவரை திருடர் என்று கூறுபவர்கள், அதற்கு முன்னர் அவரின் தந்தையுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள் என்றால் அது முற்றிலும் தவாறாகும். அதாவது 2005இல் மகிந்த ராஜபக்‌ஷவை அநுரகுமார திஸாநாயக்க கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கின்றார். 2004 சுனாமி காலத்தில் முல்லைத்தீவு மக்களுக்கு பணம் கொடுக்க கூடாது என்று நீதிமன்றத்தை நாடினர். அதேபோன்று 2009இல் புலிகளையும் தமிழ் மக்களையும் கொல்ல வேண்டும் என்று பேரணி சென்றனர். மகிந்த ராஜபக்‌ஷ நண்பர் என்று கூறிய தற்போதைய ஜனாதிபதி கூறியிருந்தார்.

இப்போது நாமல் ராஜபக்‌ஷ திருடர் என்றால் அவருக்கு தண்டனை வழங்குவதில் தவறில்லை. ஆனால் அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு நிலக்கரி வழக்கில் உள்ளே போடவில்லை. அத்துடன் பிமல் ரத்நாயக்க 323 கொள்கலன்களை விநியோகித்துள்ளார். சட்டத்தின் முன்னால் சகலரும் சமமானவர்களாக பார்க்க வேண்டும். ஆனால் இந்த நேரத்தில் நாமலை சிறையில் அடைப்பதால் வடக்கில் உள்ள மக்களுக்கும் புலம்பெயர் மக்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி நடக்கும் போது நீங்கள் உங்கள் வாக்குகளை ஒரு வீதம் வரையில் குறைக்கும் நிலைமை ஏற்படலாம். அதற்கு காரணம் நாமலை சிறையில் போடும் போது அவரின் மனைவி அரசியலுக்கு வருவார். அப்போது மக்கள் அனைவரும் அவருக்கு 159 அல்ல 189 வரையிலும் ஆசனங்களை கொடுப்பர் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )