சிவாஜிக்கு சிலை நிறுவ முழு நிதியையும் வழங்கத் தயார்;  ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராஜா

சிவாஜிக்கு சிலை நிறுவ முழு நிதியையும் வழங்கத் தயார்;  ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராஜா

அமரர் சிவாஜிலிங்கத்தின் தமிழ் தேசிய பணியை கௌரவிக்கும் முகமாக வல்வெட்டித்துறையில் சிலை ஒன்று அமைக்கப்பட வேண்டும் அதற்கான முழு நிதி உதவியையும் தனது கௌரி அறக்கட்டளை நிதியத்தில் இருந்து வழங்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராஜா தெரிவித்தார்.

வல்வெட்டித்துறை நகரில் இடம்பெற்ற சிவாஜிலிங்கத்தின் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

நான் சட்டத்தரணியானதும் சிவாஜியின் மாமனாராகிய சட்டத்தரணி மோதிலால் நேருவுடன் தொடர்பு ஏற்பட்டது. அவரைச் சந்திக்கும் காலத்தில் இவரையும் சந்தித்து கதைத்தது உண்டு.

அமரர் சிவாஜிலிங்கம் தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்பதற்காக கடுமையாக போராடி வந்துள்ளார். இதனை மதிக்கும் முகமாக அவரிற்கான சிலையை அமைப்பதற்கு நான் விருப்பம் கொண்டுள்ளேன்.

இதற்கு பொறுப்பானவர்கள் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்குவதுடன் வல்வெட்டித்துறை நகர சபையும் இதற்கு ஒத்துளைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )