ஷிரந்தி ராஜபக்சவின் மேலும் பல மோசடிகள் அம்பலம்

ஷிரந்தி ராஜபக்சவின் மேலும் பல மோசடிகள் அம்பலம்

ஷிரந்தி ராஜபக்சவின் மேலும் பல மோசடிகள் அம்பலம்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற குறுகிய காலத்திலேயே, அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச பல்வேறு அமைப்புகளை உருவாக்கி நிதி சேகரிக்கத் தொடங்கியமை நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

அரசுக்குச் சொந்தமான தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து சிரிலிய கணக்கிற்குத் தவறான முறையில் நிதி சேகரிக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணையின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இலஞ்ச ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கில், முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முக்கிய தகவல்களை முன்வைத்தார்.

அதற்கமைய, 2006ஆம் ஆண்டில் ஷிரந்தி நவோதய என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு, பின்னர் சிரிலிய சவிய எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, கால்டன் சுவ உதானய என்ற பெயரில் மற்றுமொரு அமைப்பும் உருவாக்கப்பட்டு, அதற்காக ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ முகவரி மற்றும் அரச இலட்சனை பொறிக்கப்பட்ட கடிதத் தலைப்புகளை பயன்படுத்தி நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு CT Scan இயந்திரமொன்றை நன்கொடையாக வழங்கவுள்ளதாக தெரிவித்து நிதி சேகரிப்பதற்காக தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை காப்பீட்டு நிறுவனம், தேசிய லொத்தர் சபை மற்றும் செலான் வங்கி ஆகியவற்றுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பின்னர், கால்டன் சுவ உதான அமைப்பின் கணக்கு செயலிழந்துள்ளதால், சிரிலிய கணக்கிற்கு மாற்றப்பட்ட நிதியை வைப்பிலிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 10 மில்லியன் ரூபா தொகையை அக்கணக்கில் வைப்பிலிட்டமை தொடர்பிலேயே வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )