ரணிலின் பாதுகாப்பாளர் மீது தாக்குதல்; ஒளிப்பதிவாளருக்கு பொலிஸ் பிணை

ரணிலின் பாதுகாப்பாளர் மீது தாக்குதல்; ஒளிப்பதிவாளருக்கு பொலிஸ் பிணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தனியார் ஊடக நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸாரால் அவர் நேற்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியே வந்த சந்தர்ப்பத்தில், அங்கிருந்த தனியார் ஊடக நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் ஒருவர் அவரது பாதுகாப்பு அதிகாரி மீது வீடியோக கமராவால் தாக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்ததுடன், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான பாதுகாப்பு அதிகாரி சம்பவத்தின் பின்னர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து கொம்பனித்தெரு பொலிஸாரால் குறித்த ஒளிப்பதிவாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.இதன்பின்னர் அவரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )