செம்மணி எலும்புக் கூடுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரல்

செம்மணி எலும்புக் கூடுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரல்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட என்புக் கூடுகள் தொடர்பிலான அறிக்கைகளை தாக்கல் செய்ய தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தரப்பு நீதிமன்றில் மேலும் கால அவகாசம் கோரியுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு  யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தாக்கல் செய்யப்படவிருந்த அறிக்கைகள் மேலதிக தவணை தேவைப்படும் என கோரப்பட்டதன் அடிப்படையில் அவருடைய அறிக்கைக்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி வழக்கு அழைக்கப்பட இருக்கின்றது.

அதேநேரம் பேராசிரியர் ராஜ் சோமதேவா சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மூலம் அந்த அறிக்கையை ஒக்ரோபர் மாதம் 15 ஆம் திகதி தாக்கல் செய்வதாக நீதிமன்றிற்கு அறிவித்திருக்கின்றார்.

இந்நிலையில் செம்மணி மனித புதைகுழி வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கை சம்பந்தமாக 19 ஆம் திகதி வழக்கு அழைக்கப்பட இருப்பதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.

வழக்கின் போது சட்ட வைத்திய அதிகாரி, சட்டத்தரணிகள், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )