மௌனம் கலைத்த அர்ஜுன மகேந்திரன்! அரசாங்கம் போலித் தகவலை வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு

மௌனம் கலைத்த அர்ஜுன மகேந்திரன்! அரசாங்கம் போலித் தகவலை வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனது பெயரை சட்டப்பூர்வமாக மாற்றிக்கொண்டதாக வெளியாகும் செய்திகளை முற்றிலும் மறுத்துள்ளார்.

அண்மையில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, அர்ஜுன மகேந்திரன் தனது பெயரை “ஹர்ஜன் அலெக்சாண்டர்” என மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

2015ஆம் ஆண்டு மத்திய வங்கிபிணைமுறி பத்திர மோசடி தொடர்பாகத் தேடப்பட்டு வரும் அவரை, சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதில் சிக்கல்கள் நிலவும் சூழலில், மாற்று சட்ட வழிகளை ஆராயும் நடவடிக்கையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்தகவல் அடிப்படையில் அமைச்சர் இந்தத் தகவலைக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஊடக நிறுவனமொன்றுக்கு ஓகஸ்ட் 30ஆம் திகதியிட்டு எழுதியுள்ள கடிதத்தில் இந்த குற்றச்சாட்டைப் பொய் என மகேந்திரன் நிராகரித்துள்ளார்.

“லக்ஷ்மன் அர்ஜுன மகேந்திரன்” என்ற தனது சொந்தப் பெயரிலேயே கையொப்பமிட்டு சிங்கப்பூர் முகவரியுடன் அவர் அனுப்பியுள்ள அக்கடிதத்தில், தான் பெயரை மாற்றியதாகக் கூறப்படும் செய்தி முற்றிலும் உண்மையற்றது எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில், அவரது பெயர் மாற்றம் குறித்து அரசாங்க அதிகாரிகளின் கூற்றுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )