தனியார் காணிக்குள் இராணுவத்தினரை யார் கட்டடம் நிர்மாணிக்கச் சொன்னது? பின்னர் 80 இலட்சம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்பதில் என்ன நியாயம்?

தனியார் காணிக்குள் இராணுவத்தினரை யார் கட்டடம் நிர்மாணிக்கச் சொன்னது? பின்னர் 80 இலட்சம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்பதில் என்ன நியாயம்?

கிளிநொச்சி பகுதியில் 80 இலட்சம் ரூபாய் செலுத்தி தனியார் காணிகளை பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்படுகிறது. தனியார் காணிக்குள் இராணுவத்தினரை யார் கட்டடம் நிர்மாணிக்கச் சொன்னது. அத்துமீறிய வகையில் தனியார் காணியில் கட்டடம் கட்டிவிட்டு பின்னர் 80 இலட்சம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு நியாயமானது. தமது காணிகளை பெறுவதற்கு காணி உரிமையாளர்கள் இலட்சக்கணக்கில் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடுவது முறையானதா என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.இலங்கை செய்திகள்

பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவிடம் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் ‘அதியுயர் பாதுகாப்பு வலயம்’ என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் குறிப்பிடுகிறார்.

அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்பு சார் ஆலோசனை குழுக் கூட்டத்தில் யுத்த காலத்தில் அப்போதைய சூழலை அடிப்படையாகக் கொண்டு அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களை தற்போதும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கவேண்டிய தேவை இல்லை என்று குறிப்பிடப்பட்டு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

வடக்கில் பலாலி மற்றும் மயிலிட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மத தலங்களுக்குச் செல்லலாம், வழிபாடுகளில் ஈடுபடலாம் என்று அமைச்சர் குறிப்பிடுகிறார். ஆனால் இந்தப் பகுதியில் புனித செபஸ்தியன் தேவாலயம், மயிலிட்டி ரோமன் கத்தோலிக்க பாடசாலை, வசவலான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வழிபட மத தலங்கள் ஏதும் இல்லை. புனித செபஸ்தியன் தேவாலயம் இருந்த இடம் கூட தற்போது இல்லை. இதுதான் உண்மை.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அண்மையில் வடக்குக்கு வந்தார். அப்போது அந்த மாவட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கலாம். இராணுவத்தினர் வசமுள்ள காணிகளுக்கு பதிலாக மாற்றுக்காணிகள் வழங்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.

கிளிநொச்சி பகுதியில் 80 இலட்சம் ரூபாய் செலுத்தி தனியார் காணிகளை பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்படுகிறது. தனியார் காணிக்குள் இராணுவத்தினரை யார் கட்டடம் நிர்மாணிக்கச் சொன்னது. அத்துமீறிய வகையில் தனியார் காணியில் கட்டடம் கட்டிவிட்டு பின்னர் 80 இலட்சம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு நியாயமானது. தமது காணிகளை பெறுவதற்கு காணி உரிமையாளர்கள் இலட்சக்கணக்கில் செலுத்தவேண்டும் என்று குறிப்பிடுவது முறையானதா என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )