உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சாரா ஜெஸ்மின் இறக்கவில்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சாரா ஜெஸ்மின் இறக்கவில்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருதில் இடம்பெற்ற மோதலில் சாரா ஜெஸ்மின் இறக்கவில்லை. அவர் தப்பியோடியிருக்கலாம் .தாக்குதலின் பின்னர் அவரது உடல் தாக்குதல் இடம்பெற்ற வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கல்முனை பிரதேசத்திற்கு பொறுப்பாக அப்போதிருந்த பொலிஸ் அத்தியட்சர் பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்

சிங்கள வாரப் பத்திரிகையான அருண (சத்தி அக அருண)பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்மாந்துறை மற்றும் நிந்தவூர் பிரதேசங்களில் சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டு வெடி பொருட்கள் உட்பட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன . பின்னர் 26ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் மோதல் இடம் பெறும் போது நான் அவ்விடத்திற்குச் சென்றேன் எனினும் பொலிவேரியன் கிராமத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள பாலத்திற்கப்பால் செல்ல எங்களை இராணுவம் அனுமதிக்கவில்லை

இந்த மோதலையடுத்து மோதல் இடம்பெற்ற வீட்டுப் பகுதியிலிருந்து அதி வேகமாக அணைக்கட்டு வீதியால் சவளக்கடை பகுதிக்கு பெரும் இரைச்சலுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று சென்றது. அதில் தப்பித்துச் சென்றவர் சாரா ஜெஸ்மின் ஆக இருக்கலாம்.அதற்காக யாரோ ஒருவர் அவருக்கு உதவியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )