தேசிய சர்வகட்சி அரசமைக்கும் திட்டத்துக்கு கூட்டமைப்பு ஆதரவு; ஜனாதிபதி ரணிலுக்கு சம்பந்தன் பதில் கடிதம்

தேசிய சர்வகட்சி அரசமைக்கும் திட்டத்துக்கு கூட்டமைப்பு ஆதரவு; ஜனாதிபதி ரணிலுக்கு சம்பந்தன் பதில் கடிதம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய சர்வகட்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்கும் நோக்கில் சர்வகட்சி வேலைத்திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

சர்வகட்சி அரசொன்றை அமைப்பதற்கான பொது சேலைத்திட்டத்திற்கு தமிழ்க் கூட்டமைப்பின் பங்களிப்பை கோரிக்கையாக விடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்திற்கு பதிலளித்து அனுப்பிய கடிதத்திலேயே சம்பந்தன் இவ்வாறு கூறியுள்ளார்.

தேசிய சர்வகட்சி வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்கும் அமுல்படுத்துவதற்கும் தமது கட்சி பூரண ஆதரவை வழங்கும் என அக்கடித்தில் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே அரசியல், சமூகம், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் போன்ற பல பிரச்சனைகள் நாடு எதிர்கொண்டு வருகிறது. அனைத்து தேசிய பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் எனவும் சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )