கெஹல்பத்தர பத்மேயுடன் நாமலுக்கு என்ன தொடர்பு?; விசாரணைக்கு அழைக்கப்பட்டதற்கான காரணத்தை கூறும் நளிந்த

கெஹல்பத்தர பத்மேயுடன் நாமலுக்கு என்ன தொடர்பு?; விசாரணைக்கு அழைக்கப்பட்டதற்கான காரணத்தை கூறும் நளிந்த

தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் பிரபல பாதாள குழு முக்கியஸ்தரான கெஹல்பத்தர பத்மேவிடம் இருந்து வெளியாகியுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலமளிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு சீஐடியினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு தொடர்பில் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கெஹல் பத்தரபத்மே வெளியிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை நாமல் ராஜபக்‌ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் அதற்காக ஒருவார கால அவகாசம் கோரியுள்ளார். வெளிநாட்டுக்கு பயணம் செய்யவுள்ளதாக கூறியுள்ளார். எவ்வாறாயினும் சட்டத்திற்கு மதிப்பளிப்பவர்கள் என்றால் உரிய காலத்தில் வருவார்கள் என்று நம்புகின்றோம். ஆனால் அவ்வாறு வராவிட்டால் அது தொடர்பான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுப்பர் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )