
இலங்கை வரும் சீனக் கப்பல்; மறுக்கிறது கொழும்பு; ‘கவனமாக’ கண்காணிக்கிறது டில்லி
சீனாவின் விண்வெளி மற்றும் செய்மதி கண்காணிப்பு ஆராய்ச்சிக் கப்பலான “யுவான் வாங் 5” இன் முன்னேற்றத்தை “கவனமாக” கண்காணித்து வருவதாக இந்தியா “தெளிவான செய்தியை” அனுப்பியுள்ளது .
இக்கப்பல் ,ஆகஸ்ட் 11-17 வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ”அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அத்தகைய கப்பலொன்று வருவது குறித்து தங்களிடம் உறுதிப்படுத்தப்பட வில்லையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கப்பலின் முன்னேற்றத்தை “கவனமாக” கண்காணித்து வருவதாக இந்தியா “தெளிவான செய்தியை” அனுப்பிய நிலையில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் விண்வெளி மற்றும் செய்மதி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பல் பிரவேசிக்கும் என்ற செய்தியை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுகடந்த வியாழக்கிழமை மறுத்திருக் கிறது
“அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அத்தகைய கப்பல் வருவதுகுறித்து எங்களிடம் உறுதிப்படுத்தப்பட வில்லை” என்று பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கொழும்பில் ‘ இந்துபத்திரிகைக்கு ‘ கூறியுள்ளார் இந்த விடயம் தொடர்பான செய்திகள் குறித்து கேட்கப்பட்ட போதே அவர்இதனை தெரிவித்துள்ளார் . கப்பலின் வருகையை கொழும்பை தளமாகக் கொண்ட பி ஆர் ஐ எஸ் எல்பெல்ற் அன்ட் ரோட்இனிஸி யேட்டிவ் சிறிலங்கா ) என்ற அமைப்பானது முன்னிலையப்படுத்தியிருந்தது.இந்த அமைப்பு , சீனாவின் இ லட்சியமான இணைப்புத் திட்டத்தை ஆய்வு செய்கிறது.
பி ஆர் ஐ எஸ் எல் அமைப்பானது தனது இணையதளத்தில், “யுவான் வாங் 5, ஜூலை 13 அன்று சீன துறைமுகமான ஜியாங்யினிலிருந்து புறப்பட்டு, தாய் வானைக் கடந்தது, இப்போது கிழக்கு சீனக் கடலில் உள்ளது, மேலும் ஆகஸ்ட் 11-17 வரை இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் வரை இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் வடமேற்குப் பகுதியில் விண்வெளி மற்றும் செய்மதி கட்டுப்பாடு ஆராய்ச்சி நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்போது ‘மீள நிரப்புவதற்காக எரிபொருள் யுவான் வாங் 5 கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் செய்வது, இலங்கை மற்றும் பிராந்திய திலுள்ள வளர்ந்துவரும் நாடுகள் அவற்றின் சொந்த விண்வெளி திட்டங்களை கற்றுக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று “கல்வி மற்றும் ஆலோசனை தளம்”என்ற பி ஆர் ஐ எஸ் எல் கடந்த வாரம் வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் கூறப்பட்டிருந்தது
“இது இராணுவக் கப்பல் அல்ல. கப்பலின் போக்குவரத்து விவரங்களை எவரும் பார்க்ககூடிய விதத்தில் அவை இணையத்தளத்தில் கிடைக்கின்றன, ”என்று பி ஆர் ஐ எஸ்எல் இயக்குநர் யசிரு ரணராஜா இந்துவிடம் கூறியுள்ளார்
இது பற்றி கேட்டபோது, எக்கனோ மிக்ஸ் டைம்ஸ் இல் வெளிவந்த அந்த அறிக்கையை தான் பார்த்ததாக இந்திய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது. “ஆகஸ்ட் மாதம் துறைமுகத்திற்கு இந்தக் கப்பலின் வருகைதரவிருப்பது பற்றிய அறிக்கைகள் எங்களுக்குத் தெரியும். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு வளர்ச்சியையும் அரசாங்கம் கவனமாகக் கண்காணித்து, அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது என்று மட்டும் கூறுகிறேன். இது ஒரு தெளிவான செய்தியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வாராந்த ர ஊடக சந்திப்பின் போது கூறியுள்ளார் .
உலகளாவிய கடல் கண்காணிப்பு இணையத்தளத்தின் (www.marinetraffic.com) தகவலின்பிரகாரம் , யுவாங் வான் 5 தற்போது “19.0நா ட்ஸ் “வேகத்தில் பயணிக்கிறது, மேலும் ஆகஸ்ட் 11 ஆம் திகதி நண்பகல் அம்பாந்தோட்டைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கப்பல் உண்மையில் அம்பாந்தோட்டை நோக்கிச் செல்லவில்லை என்பதை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறதா அல்லது இந்தியாவின் ஆட்சேபனைகளை ஏற்று கப்பல் திசை திருப்பப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வெளிவிவகாரஅமைச்சின் செய்தித் தொடர்பாளரின் கருத்தை மேற்கோள் காட்டி இந்து அனுப்பியிருந்த கேள்விக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சிடமிருந்து இருந்து இந்து இன்னும் பதிலைப் பெற்றிருக்கவில்லை
கடுமையான பார்வை
இந்து சமுத்திரத்தில் சீன இராணுவம் அல்லது சந்தேகத்திற்கிடமான இரட்டை நோக்கம் கொண்ட கப்பல்களின் [பிரசன்னம் ] குறித்து இந்தியா வழமையாகவே கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது , மேலும்வெளிவிவகார அமைச்சு கடந்த காலங்களில் இத்தகைய வருகைகளுக்குஇலங்கையிடம் எதிர்ப்பை தெரிவித்திருந்தது . இந்தியாவின் கவலைகள்குறிப்பாக அ ம்பாந்தோட்டையில் குவிந்துள்ளன. 2017 ஆம் ஆண்டில், கொழும்பு தெற்கு துறைமுகத்தை சைனா மெர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு இலங்கை குத்தகைக்கு வழங்கியது, தனது கடனைத் திருப்பிச் செலுத்தும் கடப்பாடுகளைக் கடைப்பிடிக்க முடியாததால், துறைமுகத்தை இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியது.
2014 இல், புது டி ல்லி தீவிர கவலையை வெளிப்படுத்தியதால், கொழும்பில் சீனாவின் அணுசக்தியால் இயங்கும் சாங்செங் 2 நீர்மூழ்கிக் கப்பலை அனுமதிப்பதற்கான இலங்கையின் முடிவு இராஜதந்திரரீதியில் முக்கிய விடயமாக மாறியது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து இந்த முடிவு குறித்து கலந்துரையாட புதுடி ல்லிக்கு சென்றார். 2019 ஆம் ஆண்டில், அந்தமான் தீவுகளுக்கு அருகில் உள்ள கடற்பகுதிக்குள் வந்த சீன கடற்படைக் கப்பலான ஷி யான் 1 ஐ இந்திய கடற்படை வெளியேற்றியது, மேலும் செய்மதி கண்காணிப்பு கப்பலின் தற்போதைய உத்தேச வருகைபோன்று 2020 ஆம் ஆண்டில், அந்தமான் தீவுகளுக்கு அருகிலுள்ள இந்துசமுத்திரத்தில் இரண்டு சீன ஆராய்ச்சிக் கப்பல்களும் இதே போன்றதொரு கவலைகளை ஏற்படுத்தியிருந்தன .

