அரசுக்கு உதவ ரணில் தயார்!

அரசுக்கு உதவ ரணில் தயார்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்காக அரசாங்கம் கோரிக்கை விடுக்குமாக இருந்தால் அதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகவே இருக்கின்றார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதியோ. ஐக்கிய தேசியக் கட்சியின் வேறந்த உறுப்பினரும் அரசாங்கத்தில் பதவிகளைள பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியினால் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பவர் பூரண அறிவையும், அனுபவத்தையும் கொண்ட தலைவராக இருக்கின்றார். அனர்த்த முகாமைத்துவத்தின் போது அரசாங்கத்திற்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு அவர் விருப்பத்துடனேயே இருக்கின்றார்.

அதேபொன்று எமது தலைவரினதும், எங்களுடையதும் அனுபவங்களை அரசாங்கத்திற்கு வழங்க தயாராகவே இருக்கின்றோம். எவ்வாறாயினும் நாங்கள் அரசாங்கத்தில் எவ்வித பதவிகளையும் எதிர்பார்க்கவில்லை என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )