மகிந்தவுடன் நிற்பது நானல்ல; ஆளும் கட்சி எம்.பி.கூறுகிறார்

மகிந்தவுடன் நிற்பது நானல்ல; ஆளும் கட்சி எம்.பி.கூறுகிறார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் உள்ள புகைப்படத்தில் காணப்படும் நபர் தான் அல்ல என்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டாச்சி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த புகைப்படம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் உள்ள புகைப்படங்கள் தொடர்பான திருமண விழாவில் தான் கலந்து கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அந்த நிகழ்வுக்கு தான் அழைக்கப்படவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

புகைப்படம் எந்த வகையிலும் திருத்தப்பட்டாலோ அல்லது கையாளப்பட்டாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டாச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )