
செம்மணிப் புதைகுழியை மூடி மறைப்பதை நிறுத்து!; யாழில் ஆர்ப்பாட்டமும் கருத்தரங்கும்
செம்மணி மனிதப் புதைகுழியை மீண்டும் மூடி மறைப்பதை நிறுத்து: உண்மையை வெளிப்படுத்து! எனும் கோரிக்கையை வலியுறுத்தி சம உரிமை இயக்கம் நடாத்தும் ஆர்ப்பாட்டமும் கருத்தரங்கும் நிகழ்வு நாளை மறுதினம் சனிக்கிழமை (01) யாழ்.நகரில் இடம்பெறவுள்ளது
இதற்கமைய, ஆர்ப்பாட்டம் பிற்பகல் 1 மணியளவில் யாழ்.நகரில் நடைபெறவுள்ளதுடன் கருத்தரங்கு அன்றையதினம் மாலை 3 மணியளவில் யாழ்.நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் இடம்பெறும்.
ஆர்ப்பாட்டத்திலும், கருத்தரங்கிலும் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு சம உரிமை இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

