
பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த 1.5 ஏக்கர் காணி விடுவிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விடுவிக்கப்பட்ட காணிகளின் விடுவிப்புக்கான ஆவணத்தை கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரனிடம் இராணுவத்தினர் கையளித்தனர்.
இந்த நிகழ்வு (29) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

