சகோதர உறவுகளுக்கு வராத கண்ணீர் காசா மக்களுக்காக வருகிறதா? அநுரவின் உரையால் சிறிதரன் காட்டம்

சகோதர உறவுகளுக்கு வராத கண்ணீர் காசா மக்களுக்காக வருகிறதா? அநுரவின் உரையால் சிறிதரன் காட்டம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா, யுத்த காலத்தில் நமது சகோதர உறவுகளுக்காக சிந்தாத கண்ணீரை தற்பொழுது காசாவில் இடம்பெறுகின்ற யுத்தத்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிந்துகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். 

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக நடைபெற்றது. 

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த  சிறிதரன் எம்.பி. 

கடந்த கொடிய யுத்தத்தின் போது எமது உறவுகள் ஒருவேளை உணவு கூட இல்லாமல் இருந்த வேளையில் பல தாய்மார்கள் தந்தையர்கள் சிறுவர்கள்  கொத்து கொத்தாக செத்து மடிந்தார்கள்.

அன்றைய காலத்தில் முக்கிய பதவியை வகித்த அனுர குமார திசாநாயக்க, அப்பொழுது நமது சகோதர உறவுகளுக்காக சிந்தாத கண்ணீரை தற்பொழுது காசாவில் இடம்பெறுகின்ற யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு  தனது கவலை தெரிவிக்கின்றார்.

அப்படி இரக்க மனத்தை கொண்டவராக இருந்தால் ஏன் எமது உறவுகள் செத்து மடிந்த போது தனது அனுதாபங்களையும் எந்தவித ஆதங்கள்களையே  தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார். 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )