
வெறுமனே வாய்ப்பேச்சால் ஆட்சி செய்வதே தற்போதைய அரசாங்கம்; பொய்கூறி மக்களை ஏமாற்றுகிறது சபையில் நாமல் வெளிப்படை!
அதிகளவில் பொய்கூறி மக்களை ஏமாற்றும் அரசாங்கமாக நீங்கள் இப்போது மாறியிருக்கிறீர்கள். உங்களுடைய அரசாங்கம் வெறுமனே வாய்ப்பேச்சால் ஆட்சியை செய்யும் அரசாங்கமாக மாறியுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குடுவை வைத்து ஆட்சி நடத்தும் அரசாங்கம், போதைப்பொருளை வைத்து ஆட்சி செய்கின்றீர்கள். உங்கள் குறைகளை வைத்துக்கொண்டு நீங்கள் மற்றவர்களை குற்றஞ்சாட்டிக் கொண்டு செல்கின்றீர்கள்.
பிற்பாக்கெட்டை அடித்துக்கொள்பவர்களைக் கள்ளர் என்று தான் சொல்லுவார்கள். அதேபோன்று தான் நீங்களும் செயற்படுகின்றீர்கள். ஆகவே அரசாங்கம் என்ற போர்வைக்குள் திருடர்களை நீங்கள் பாதுகாக்க வேண்டாம். எங்கள் மீது வைக்கின்ற குற்றச்சாட்டை ஒரு விரல் சுட்டிக்காட்டினால் உங்கள் மீதான குற்றச்சாட்டை நான்கு விரலும் சுட்டிக்காட்டுகின்றது.
சர்சைக்குரிய கொள்கலன் தொடர்பில் கதைத்த அர்ச்சுனா சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டார்.அதற்கு நீங்கள் எடுத்த நடிவடிக்கைகள் யாவை? பழைய ஆட்சி முடிந்து விட்டது. அதை வைத்து ஆட்சி நடத்தாதீர்கள். உளவு அறிக்கை வந்தபோதும் ஏன் அந்த இரண்டு கொள்கலனையும் கைப்பற்றவில்லை என்றவாறான கேள்விகளை முன்வைத்துள்ளார்.