
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்த சீன தூதுவர்!
இலங்கைக்கான சீனத் தூதர் கி ஜென்ஹோங், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை நீக்குதல் சட்டம் அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
அதன் விதிகளின் படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
அதன்படி, சட்டம் நிறைவேற்றப்பட்ட மறுநாள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயராம மாவத்தையில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வௌியேறினார்.
அன்றைய தினம் சீனத் தூதுவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.