
நேற்றும் 9 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு; குவியல் குவியலாக வருகிறது
செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 231 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 213 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் 42 வது நாளாக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் செ.லெனின்குமார் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
அகழ்வுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், புதிதாக 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டது. 7 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது.
இதுவரை மொத்தமாக 231 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டது.
இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் மொத்தமாக 213 எலும்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது. அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும் – என்றார்.