புதிய செம்மணி வீதியில் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து!

புதிய செம்மணி வீதியில் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து!

யாழ். புதிய செம்மணி வீதிச் சந்தியிலிருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியூடாக டிப்பர் வாகனங்கள் முற்பகல் 6 மணி தொடக்கம் பிற்பகல் 6 மணிவரை பயணிப்பதற்கு முற்றாக தடை விதிக்கப்பதோடு ஏனைய பாரவூர்திகள் முற்பகல் 7 மணி தொடக்கம் முற்பகல் 9 மணிவரையும் பிற்பகல் 12.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரையும் குறித்த வீதியூடாக பயணிப்பதற்கு தடை விதித்து பொதுப்போக்குவரத்தினை இலகுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்பள்ளி சிறார்கள், பாடசாலை மாணவர்கள், உத்தியோகத்தர்கள் பணிக்கு செல்லும் நேரங்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் ஆகியவற்றினைக் கருத்திற் கொண்டு பொதுப்போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்குடன் மேற்கூறித்த விடயங்கள் நல்லூர் பிரதேச சபையின் தீர்மானங்கள் ஆக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன.

இது தொடர்பான அறிவித்தல் பலகைகள் வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுமுள்ளன. எனவே வாகனச் சாரதிகள் குறித்த விதிமுறைகளைப் பின்பற்றுமாறு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )