ரணில் வேட்பாளரானால் போராட்டங்கள் வெடிக்கும்

ரணில் வேட்பாளரானால் போராட்டங்கள் வெடிக்கும்

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இன்றும் நாளையும் கொழும்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் இந்தப் போராட்டங்களில் ஈடுபடவுள்ளனர்.

காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்துடன் இணைந்ததாகவே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இவர்கள் தனித் தனியே பல்வேறு இடங்களில் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளதுடன், சில குழுக்கள் பாராளுமன்றத்தை நோக்கி பேரணிகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கோத்தாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய போது, அவருடன் ரணில் விக்கிரமசிங்கவையும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வந்த இவர்கள், ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு பதவி விலகாத காரணத்தினால் தமது போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தில் இன்று, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவராக அறிவிக்கப்படுவராக இருந்தால் சில குழுக்கள் பாராளுமன்றத்தை நோக்கி எதிர்ப்பு பேரணியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை நாடு முழுவதும் பிரதான நகரங்களிலும் இன்றும் நாளையும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )