கொட்டாஞ்சேனை மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் – விசாரணையில் முன்னேற்றம்?

கொட்டாஞ்சேனை மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் – விசாரணையில் முன்னேற்றம்?

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படும், மாணவி துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று இந்த விடயம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான், பசன் அமரசேன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த விடயம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காணொளிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக, இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்லும் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணை பணியகத்தின் கொழும்பு வடக்கு பிரிவின் பொறுப்பதிகாரி நீதிமன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்தக் காட்சிகள் பரிசோதனைக்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அறிக்கைகள் தொடர்ந்தும் நிலுவையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்ததன் பின்னர், விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான், பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )