பிள்ளையான் கூறுவோரை சுட்டுக் கொன்றவர்  கைது ; காத்தான்குடியில் சிக்கிய முக்கிய சகா ஷாகித்

பிள்ளையான் கூறுவோரை சுட்டுக் கொன்றவர்  கைது ; காத்தான்குடியில் சிக்கிய முக்கிய சகா ஷாகித்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்டும்  சி.சந்திரகாந்தன் உத்தரவில் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடத்திய பிள்ளையானின் சகாவான  முகமட் ஷாகித் என்பவரை மட்டக்களப்பு காத்தான்குடியில் அவரது வீட்டில் வைத்து நேற்று  புதன்கிழமை   மாலை சி.ஐ.டி. யினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத்  கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம்  தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும்முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு வினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த ஏப்பிரல் 7ஆம்  திகதி  கைது செய்தனர்.

அவரிடம் தொடர்ந்து இடம்பெற்றுவரும் விசாரணைகளையடுத்து காத்தான்குடியைச் சேர்ந்தவரும் கடந்த காலத்தில்  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து பிள்ளையானுடன் செயற்பட்ட 45 வயதுடைய முகமட் ஷாகித்தை நேற்று புதன்கிழமை மாலையில் அவரது வீட்டில் வைத்து கொழும்பில் இருந்து வந்த  சி.ஐ. டி.யினர் கைது செய்ததாக அவர் தெரிவித்தார்

இதேவேளை கைது செய்யப்பட்வர் கடந்த 2024- ஜூன்  17 ஆம்  திகதி காத்தான்குடி மீன்பிடி இலாகாவீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த பெண்ணிடம் தங்க நகைகளை கொள்ளையடிப்பதற்காக கைத்  துப்பாக்கியால் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து அவரை பொலிஸார் கைது செய்து 3 நாள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்த நிலையில் அவரிடமிருந்து அந்த கைத்துப்பாக்கியை மீட்கமுடியாத நிலையில் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி விளக்கமறியவில் வைக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு வெளிவந்தவர் என்பது குறிப்பிட தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )