இந்திய மீனவர்களின் படகுகளால் இடரை எதிர்நோக்கியுள்ள மயிலிட்டி மீனவர்கள்! தீர்வினை பெற்றுத்தர ஸ்ரீதரன் நடவடிக்கை!

இந்திய மீனவர்களின் படகுகளால் இடரை எதிர்நோக்கியுள்ள மயிலிட்டி மீனவர்கள்! தீர்வினை பெற்றுத்தர ஸ்ரீதரன் நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சென்றிருந்தார்.

அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 140க்கும் அதிகமான படகுகள் மயிலிட்டி கடற்பரப்பினுள் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இதனால் உள்ளூர் மீனவர்களின் படகுகளை நிறுத்தி வைப்பதற்கும் , தொழிலுக்கு மீனவர்கள் செல்வதற்கும் இடர்களை சந்தித்து வருகின்றனர்.

இது தொடர்பில் அப்பகுதி மீனவர்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மைலிட்டி துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இந்நிலையில், மயிலிட்டி துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை, இந்திய மீனவர்களின் 140க்கும் மேற்பட்ட படகுகள் குறித்த துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் இதன் போது அவர் கண்காணிப்பு விடயத்தில் ஆராய்ந்தார்.

குறிப்பாக உள்ளூர் மீனவர்கள் தங்களுடைய படகுகளை கரையில் கட்டி வைக்க முடியாத நிலை காணப்படுவதுடன் இடப்பற்றாக்குறை காணப்படுவதாக இதன்போது மீனவர்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சுட்டிக்காட்டினர்.

மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் என்பது இலங்கை துறைமுகங்களில் மிகப்பெரிய துறைமுகம்.

1990ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த துறைமுகத்தில் இருந்து பிடிக்கப்படும் மீன்கள் தேசிய பொருளாதார மீன் உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கினை வகித்தது.

ஆனால் தற்பொழுது இந்த துறைமுகம் இந்திய மீனவர்களின் படகுகளை கட்டி வைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு இடமாகவே காணப்படுகின்றது.

இதற்கு ஒரு மாற்றுத் தீர்வினை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இது தொடர்பில் நாடாளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றவுள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )