இதுவரை இராஜினாமா கடிதத்தினை கையளிக்காத கோட்டா!

இதுவரை இராஜினாமா கடிதத்தினை கையளிக்காத கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று பதவி விலகுவதாக கடந்த 9ஆம் திகதி அறிவித்ததுடன், தனது இராஜினாமா கடிதத்தை கையெழுத்திட்டு சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக செய்தி வெளியானது.

பின்னர், அவர் நேற்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், சபாநாயகர் நேற்று ஜனாதிபதியின் இராஜினாமாவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பை விடுத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை எனக்குறிப்பிட்டார்.

அதன்பின்னர், ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மாத்திரமே தெரிவித்திருந்திருந்தார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து இராஜினாமா கடிதம் கிடைப்பது மேலும் தாமதமாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )