
மனித உரிமைகள்,அடிப்படை உரிமைகள் தொடர்பில் விரிவான அரசியலமைப்பு திருத்தம் மிகவும் அவசியம்
எமது நாட்டில் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பில் இன்னும் விரிவான அரசியலமைப்பு திருத்தம் அவசியமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் உடனான கட்சித் தலைவர்களின் சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வருகையுடன் எமது நாட்டில் மீண்டும் மனித உரிமைகள் தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளதாகவும், ஜனநாயகமான சமூகத்தில் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அவசியமானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இதன்படி அரசியல் கட்சிகள் இணங்கியுள்ள பயங்கரவாதத்தை தடுப்புச் சட்டத்தில் தெளிவான மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும், அதற்காக ஐக்கிய மக்கள் சக்தி முன்னிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.