முதலாவது பயணத்தை ஆரம்பித்த ஏர்பஸ் A330-200 விமானம்

முதலாவது பயணத்தை ஆரம்பித்த ஏர்பஸ் A330-200 விமானம்


ஸ்ரீலங்கன் விமான சேவையால் புதிதாக வாங்கப்பட்ட ஏர்பஸ் A330-200 விமானம் இன்று மாலைதீவில் உள்ள மாலே சர்வதேச விமான நிலையத்திற்கு தனது முதல் விமானப் பயணத்தை முன்னெடுத்திருந்தது.கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 1.48 மணிக்கு விமானம் புறப்பட்டதாக ஸ்ரீ லங்கன் விமான சேவையின் நிறுவன தொடர்பு தலைவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

இந்த விமானம், பிரான்சில் உள்ள ஏர்பஸ் விமான உற்பத்தி ஆலையில் இருந்து 04 ஆம் திகதி காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அதன் பின்னர், விமானத்தின் பதிவு உட்பட பல முக்கியமான சர்வதேச சம்பிரதாயங்களை நிறைவு செய்த பின்னர், விமானம் அதன் முதல் விமான பயணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாலைதீவு புறப்பட்டது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )