முன்னாள் எம்.பி உதய கம்மன்பில குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்

முன்னாள் எம்.பி உதய கம்மன்பில குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார்.

கேள்விக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இன்று அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவும் கடந்த வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )