தந்தை செல்வா காட்டிய தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஒன்றிணையுங்கள்

தந்தை செல்வா காட்டிய தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஒன்றிணையுங்கள்

உங்களது பதவிகளுக்காக தமிழ் மக்களை விற்காதீர்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், தொண்டமான் உள்ளிட்டவர்கள் உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி இன்றும் இருக்கிறது. தமிழர் விடுதலைக் கூட்டணியும் நானும் உயிரோடு இருக்கிறோம்.

தந்தை செல்வா காட்டிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் வழியில் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வரவேண்டும். நான் அரசியலில் இருந்து ஒதுங்க தயார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியினர் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து வெற்றிகரமாக செயற்பட ஒத்துழைப்பதே தந்தை செல்வாக்கு நீங்கள் செய்யக்கூடிய மரியாதை ஆகும். இறந்து போன பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆத்மா சாந்தியடையும் என மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )