
75 மில்லியனுக்கும் அதிகமாக சொத்து; விமல் வீரவன்சவும் விரைவில் சிக்கலாம்
முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தான் அமைச்சராக பணியாற்றிய காலத்தில் 75 மில்லியனுக்கும் அதிகமாக சொத்து சேர்த்தமை தொடர்பான வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விமல் வீரவன்ச அமைச்சராக ஐந்து ஆண்டுகள் பதவி வகித்த காலத்தில் சம்பளம் மற்றும் ஏனைய வருமானங்களிலிருந்து சம்பாதிக்க முடியாத சுமார் 75 மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க உத்தரவிட்டார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதிவாதி, கடந்த வியாழக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இதேவேளை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கங்களில் பணியாற்றிய 40 அரசியல்வாதிகள் கைது செய்யப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.