பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மஹிந்தவுடன் திடீர் சந்திப்பு

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மஹிந்தவுடன் திடீர் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரால் (ஓய்வுநிலை)பஹீம் உல் அசீஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு அண்மையில் கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தை உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இச் சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை நெருக்கடியான நிலையை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் நெருக்கமான நண்பன் என்ற அடிப்படையில் பாகிஸ்தான் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

யுத்தகாலத்தில் பாகிஸ்தான் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியதால், விடுதலை புலிகள் அமைப்பு கொழும்பில் இருந்த அப்போதைய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகளை கொலை செய்ய முயற்சித்தது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் அயல் நட்பு நாடு என்ற அடிப்படையில் பாகிஸ்தான் இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கியது. ஆகவே இவற்றுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிப்பதற்கு கடமைப்பட்டுள்ளேன்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மதம், அரசியல்,பொருளாதாரம் மற்றும் சமூக தொடர்பு உள்ளிட்ட நிலைகளிலான இருதரப்பு தொடர்புகள் மேலும் பலமடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

பழைய நண்பரின் வருகை கடந்த காலங்களை நினைவுப்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரிடம் நன்றி தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )